அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம்…!
காட்டு பன்றி வேட்டைக்காக வைத்த அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம்.இருந்தும் கன்றிற்கு தனது வலியை பொருட்படுத்தாமல் தனது கன்றிற்கு பால் கொடுத்த மாட்டின் பாசம் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு பகுதியில் காட்டுப்பன்றி வேட்டைக்காக வைத்த அவுட் காயை கடித்த பசுமாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சேதம் அடைந்த நிலையிலும் தனது கன்றுக்கு பால் கொடுக்கும் நிகழ்வு குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு செங்கல்படுகை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாபர் அலி. விவசாயி.இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். உடன் தனது தோட்டத்தில் ஆறு பசுமாடுகளையும், காளை மாடு ஒன்றையும் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாடுகள் தினசரி மேய்ச்சலுக்கு சென்று மீண்டும் மாலை தோட்டத்திற்கு வருவது வழக்கம்.ஆனால்,ஒரு பசு மாடு மட்டும் மேய்ச்சலுக்கு சென்று திரும்ப வரவில்லை. இதைத்தொடர்ந்து ஜாபர் அலி தனது பசு மாட்டை பல்வேறு பகுதிகளில் நண்பர்கள் உதவியுடன் தேடினார்.
இந்தநிலையில் அவரது பசு மாடு வாயில் பலத்த காயங்களுடன் கல்லாற்றில் நின்று கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து பசுமாட்டு வாயில் காட்டு பன்றிக்கு வைக்கப்பட்ட அவுட் காய் வெடித்து படுகாயம் அடைந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே அவுட் காயை கடித்த பசு மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் சேதம் அடைந்த நிலையிலும் தன்னுடைய கன்றுக்கு பசு மாடு பால் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
காயமடைந்து தனது வலியையும் பொருட்படுத்தாமல் கன்றுக்காக பால் கொடுத்த நிகழ்வு காண்போர் நெஞ்சங்களை கரையச் செய்துள்ளது.இந்த நிலையில் இன்று அவுட் காயை கடித்த பசு மாடு இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







