துப்பாக்கியால் கலெக்டரை சுட முயன்ற செந்தில் பாலாஜி..!
காந்திபுரம் பகுதியில் உள்ள பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து கலெக்டரை சுடுவது போல் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறிவைத்து தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காந்திபுரம் பகுதியில் சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தனர்.
அப்போது பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை அருகிலிருந்த போலீசாரிடம் இருந்து வாங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென மாவட்ட ஆட்சியரை நோக்கி குறி வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.





