செமஸ்டர் தேர்வு தேதிகள் வெளியீடு..!
தமிழகத்தில் கருணாவின் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் கல்லூரி திறப்பு பற்றி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு செமெஸ்டர் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. மார்ச் 16 ஆம் தேதி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப் படுகிறது. நேரடி பாடங்கள் ஜூன் 16 வரை நடத்தப்படும்.
அவர்களுக்கான செய்முறை தேர்வு ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெறும். இறுதி செமெஸ்டருக்கான தேர்வு ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்படும்.






