எப்போது முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000?
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கருத்தாய்வு கூட்டம் 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றுள்ளது.
கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிநிலை அறிக்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






