ஆசிரியர்களுக்கு செம சர்ப்ரைஸ்: பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்குவது போல ஒன்றிய அளவில் வழங்கப்பட்டு வருகின்ற தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பல மாநிலங்கள் தயங்குகின்றன. காரணம் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளையும் கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் விளையாட்டு துறையில் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தேசிய அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.






