கௌதம் கார்த்திக் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார் செல்வராகவன்..!
கௌதம் கார்த்திக் நடிப்பில் புதிய படத்தை இயக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக் படத்திற்கான கதையை எழுதி இருக்கும் செல்வராகவன் அதை குறைந்த பட்ஜெட்டில் முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கும் முடிவில் இருந்தார் செல்வராகவன். ஆனால் நடிகர் தனுஷ் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனால் தனுஷ் படத்திற்கு முன்பாக கௌதம் கார்த்திக் படத்தை தொடங்கும் முடிவில் செல்வராகவன் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.







