போலி பத்திரிக்கையாளர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை..!
சென்னை போரூரில் பத்திரிக்கையாளர்கள் போன்று போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு கஞ்சா விற்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போரூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்த பொழுது அவர்கள் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பது தெரிய வந்தது.
விசாரணையின் பொழுது ஒருவர் தப்பி நிலையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





