தமிழகம் – கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை..!
தமிழகம் – கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழகம்-கேரளா இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அந்த மாநில நிர்வநீர்வள ஆதார துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த குழுவின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று கேரளாவில் நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக குழு கேரளா சென்றுள்ளது. பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைத் திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு குறித்து கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை பிரச்சினை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







