பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் சமந்தா..!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். தொழிலதிபர் ஆக மாறுகிறது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டைலான ஆடைகளை உடுத்துவது தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றார்.
அந்த விருப்பத்தை சினிமாவோடு விட்டுவிடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளதாக அவர் கூறினார். இது தனது கனவு என்றும் சில மாதங்கள் முயற்சி செய்து இப்போது தான் அதனை நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







