--- --:--:-- --

திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2,000 உதவித்தொகை..!

10

ரண்டாம் தவணையாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரொனா நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசின் சார்பில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் 2,956 திருநங்கையருக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

 

மேலும் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்திருந்த 8,493 பேருக்கு 2000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்திருந்தோருக்கு இரண்டாம் தவணையாக மேலும் 2000 ரூபாய் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

 

இதற்காக ஒரு கோடியே 71 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon