காவல்துறையின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு சீமான் கண்டனம்
நெருக்கடிக் காலகட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தி அவசர சட்டத்தை அமல்படுத்தும் போதிலும் பொதுமக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது ஆங்காங்கே நடைபெறும் காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் இந்த போக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் அரசுக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் மனிதாபிமானத்துடன் கூடிய கண்டிப்பை கடைபிடிக்குமாறு காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.







