பள்ளி மாணவர்கள் பேருந்தில் சாகச பயணம்..!
திருக்கோவிலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அன்னூர் பேட்டை பேரூராட்சி பகுதியில் தடம் எண் நான்கில் மணலூர் பேட்டையிலிருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்த நிலையில் அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
இதனை சக மாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளனர். தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.





