மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை..!
பீகாரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவின் புஹாரி பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரங்கேறியுள்ளது இந்த கொடூர சம்பவம்.
பள்ளிக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பள்ளி முதல்வர் அரவிந்த் குமார் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.
மாணவி தரப்பில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் அரவிந்த் குமாரையும் அவர் செய்த குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.






