--- --:--:-- --

சாத்தான்குளம் கொலை வழக்கு – காவலர்கள் தாக்கியதால் தான் இறப்பு நேர்ந்துள்ளது

7

காவலர்கள் தாக்கியதால் தான் ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் செல்வம் முருகன் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த வழக்கு மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உ டலை பிரேத பரிசோதனை செய்த செல்வம் முருகன் ஆஜர் ஆனார்.

 

அவரிடம் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். அப்பொழுது பல்வேறு காரணங்களால் தான் மரணம் ஏற்பட்டது என்று குற்றவாளிகளின் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

 

அப்பொழுது காவலர்கள் தாக்கியதால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததாக மருத்துவர் செல்வ முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Right Menu Icon