சினிமா வாய்ப்பு குறைந்ததால் சாக்ஷி அகர்வால் எடுத்த முடிவு!
பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பிக் பாஸ் மூலம் பாப்புலர் ஆன பிறகும் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் தற்போது சீரியல்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சன் டிவியின் கண்ணான கண்ணே தொடரில் தான் சாக்ஷி அகர்வால் வந்திருக்கிறார். அவர் கெஸ்ட் ஆக ஒரு எபிசோடுக்கு மட்டும் வருகிறாரா அல்லது தொடர்ந்து வரும் கதாபாத்திரமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சாக்ஷி அகர்வால் கண்ணான கண்ணே குடும்பத்துடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை சன் டிவி வெளியிட்டு இருக்கிறது.






