சாய் பல்லவி சோலோவாக களமிறங்கியுள்ள கார்கி..!
நடிகர்களுக்கு இணையாக இப்போது நடிகைகளும் தங்களது நடிப்புக்கு சவாலான படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அதிலும் மிகவும் தரமான கதைகளாக நடித்து மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார்கள்.
அப்படி அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, சமந்தா, அமலாபால் என பல நடிகைகள் போல்டான கதைகளை தேர்வு செய்து நடித்துள்ளார்கள்.
அவர்களின் வரிசையில் தற்போது களமிறங்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி.அவர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் காளி வெங்கட்டுடன் இணைந்து நடித்துள்ள கார்கி படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.






