கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 லட்சம் ரூயாய் நிதி உதவி வழங்கிய சச்சின்!
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரொனா நடவடிக்கைகளுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும் உதவித்தொகையாக வழங்கியுள்ளார்.
இதேபோல வைரஸ் பாதிப்பிற்கு பிரபல விளையாட்டு வீரர்கள் சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி, இர்பான் பதான், பிவி சிந்து உள்ளிட்ட பலரும் நிதியுதவி, பொருளுதவி வழங்கியுள்ளனர்.







