ரூ.2000 நோட்டுகளே புழக்கத்தில் அதிகம் உள்ளன : நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகளை விட 2000 ரூபாய் நோட்டுகள் தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளித்தார்.
அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் படி 2017 முதல் 2020 இரண்டாம் ஆண்டு வரையில் சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவு ஆளான 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்துவிட்டது என்பது தொடர்பாக மத்திய அரசிடம் தகவல் இல்லை எனவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





