இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000.. கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கை..!
கர்நாடகாவில் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறும் இல்ல தரசிகள் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்தியோதயாத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டை மேலுள்ள ரேஷன் அட்டைகள் என இரு வார்டுகளிலும் உறுப்பினராக உள்ள வயது மூத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டுகள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டு நேரடியாக பண வரவு வைக்கப்படும் எனவும் அமைச்சர் லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
85 சதவீதம் பெண்கள் இதன் மூலம் பலன் அடைவார்கள் என்றும், பயன்பாட்டு இணைப்பு ஆகியவற்றை ரேஷன் கார்டுகளில் செய்ய முடியாது எனவும் பெண்கள் இல்லாத குடும்பத்தில் வயது மூத்த ஆண்கள் குடும்ப தலைவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.






