ஜாமீனில் வெளியே வந்திருந்த ரவுடி…படுகொலை!
திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் ரமேஷ் என்று ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சுள்ளான் ரமேஷ் மீது ஏற்கனவே இரண்டு கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சுள்ளான் ரமேஷ் நேற்று பாரதிபுரம் பாண்டி கோவில் அருகே நடந்து சென்ற போது சுற்றி வளைத்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
இந்த தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை வீரர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.







