--- --:--:-- --

மகளை தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ள ரவுடி மற்றும் அவரது மனைவி!

13

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மகளை தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ள ரவுடி மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர் அந்த பகுதியை சேர்ந்த  ஜான் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள அவருக்கு மறைமுக உதவிகள் செய்து வந்ததாக அவரது மனைவி ஷாலினியை காட்பாடி காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர்.

 

இரு தினங்களுக்கு முன் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து ஷாலினி கணவருடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களின் 9 வயது மகளை பராமரிக்க இயலாமல் அவர்களின் தந்தை அரியலூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார். அங்கு தாயை காணாத ஏக்கத்தில் சிறுமி பரிதவித்து வருவதாக தொண்டு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon