திடீரென கார்கள் மீது உருண்டு விழுந்த பாறைகள்.. நசுங்கிய கார்கள்..!
நாகலாந்து மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின்பொழுது பாறை விழுந்து ஒருவர் உயிரிழந்தார். ஹிமாபூர் மாவட்டம் சுமுக்கடியா பகுதியில் திடீரென நலச் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையிலேயே சிக்கிக் கொண்டன.
அப்பொழுது பாறைகள் உருண்டு வந்து விழுந்ததில் சாலையில் இருந்த வாகனங்கள் சேதமாகின. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.






