கேரளாவின் கவடியார் அரண்மனையில் கொள்ளை..!
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள படுக்கையறை லாக்கரில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள பழங்கால நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கேரளாவின் கவடியார் அரண்மனையில் கொள்ளை: நகைகள் அரண்மனைக்குள்ளேயே இருக்கும் என்று ராஜகுடும்பத்தினர் நினைத்தனர் – காவல்துறை தகவல்
இந்தத் திருட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மார்ச் 13-ம் தேதிதான் ராஜகுடும்பத்தினர் முறையாகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவு 305-ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தின் வசிப்பிடமான திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில், ரூ.2 கோடி மதிப்புள்ள பழங்கால நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் திருட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மார்ச் 13-ம் தேதிதான் ராஜகுடும்பத்தினர் முறையாகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவு 305-ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், “இன்று நாங்கள் அங்கு வசிப்பவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். நிபுணர்கள் குற்ற நடந்த இடங்களிலிருந்து கைரேகைகளைச் சேகரித்துள்ளனர்… நாங்கள் விசாரணையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம்,” என்றார்.
ராஜகுடும்பத்தைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் தனது புகாரில், அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள தனது படுக்கையறையில் உள்ள இரும்பு அலமாரியில் இருக்கும் ஒரு லாக்கரில் இந்த நகைகள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட பொருட்களில் பல தலைமுறைகளாக ராஜகுடும்பத்தின் வசம் இருந்த விலைமதிப்பற்ற உலோகங்கள், கற்கள் மற்றும் நாணயங்கள் போன்ற பழங்காலப் பொருட்கள் அடங்கும்.
ஆரம்பத்தில், முறையான புகார் அளிக்காமல் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அரண்மனை தரப்பில் விரும்பப்பட்டது. ஆனால், கடந்த வாரம் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
புகார் அளிக்க இவ்வளவு தாமதமானது ஏன் என்பது குறித்து ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில், “நகைகள் அரண்மனைக்குள்ளேயே எங்காவது தவறுதலாக வைக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் (குடும்பத்தினர்) நினைத்தனர். இந்த மாளிகையில் ராஜகுடும்பத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு தனியார் ஏஜென்சியின் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. அதோடு, வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது. ஊழியர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வோம்,” என்றார்.






