--- --:--:-- --

கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள்! வெளியான சி‌சி‌டி‌வி காட்சிகள்!

5761ad74-4044-4e7f-bed2-146bb6fca7e0

பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் கோவை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை அவினாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சோமசுந்தரம் சாலை,காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் எலக்ட்ரிக்கல் மற்றும் பம்ப்செட் என பல்வேறு தொழில்துறை சார்ந்த வணிகம் நடைபெற்று வருகிறது.பல மாநிலத்தவரும் அதிகம் வந்து போகும் இந்த பகுதியில் பல கோடி ரூபாய் அளவில் தினமும் வணிகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் பூட்டிய கடையை உடைத்து கடையினுள் உள்ள ரொக்க பணத்தை மட்டும் ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று இது தொடர்பாக புகார்களும் காவல் துறையிடம் அளிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த நிலையில் இன்று அதிகாலை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை மூன்று பேர் கும்பல் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் காவல்துறை மீது கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் கிடைக்காததால் காவல்துறையினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.ஒரே பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்கள் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon