தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியீடு..!
தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு பல நாட்களாக இருந்து வருகிறது. மார்ச் 2-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
ஆனால் அதனுடைய விடைத்தாள் திருத்தும் பணிகள் கொரொனா காரணமாக பல நாட்கள் காரணமாக தள்ளிப் போயின. அதற்குப் பிறகு ஜூன் மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதி நாளில் நடத்தப்பட்டிருந்த தேர்வை சில மாணவர்கள் எழுதாமல் இருந்தனர்.
எனவே அந்தத் தேர்வை நடத்தி முடித்தால் தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான் தாமதம் ஆகிறது என்று கூறப்பட்ட நிலையில் தற்போதுபிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.






