கடலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புப் பகுதி
கடலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதி ஒன்று வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையால் கூத்தப்பாக்கம் பகுதியிலுள்ள விஜயலட்சுமி நகரில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் உள்ளே மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். போதிய வடிகால் வசதி அமைத்து தராதது மழைநீர் தேங்குவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.





