அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்..!
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முறையாக வருகை தருகிறார்களா? பதிவேட்டை கையாளுகிறார்களா? என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்றும் அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பில்லை நிலவும் அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் மருத்துவமனையில் பரிசோதித்து முடிவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.





