--- --:--:-- --

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

1

மிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குமரிக்கடல் மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon