கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் உடல் மீட்பு..!
நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களில் மேலும் இருவரது உடல் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகில் மோதி நடுக் கடலில் மூழ்கடித்து 4 மீனவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டி தங்கச்சிமடம் அருகே மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இதனிடையே கடந்த 3 நாட்களாக நெடுந்தீவு கடற்கரை பகுதியில் தேடி வந்த இலங்கை கடற்படையினர் நேற்று இருவரது உடல்களை கண்டெடுத்துள்ளனர். மூன்றாம் தினமான இன்று மேலும் இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.







