கொரோனா மரணம் என குறிப்பிடாவிட்டாலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்..!
இறப்பு சான்றிதழில் கொரொனா மரணம் என்று கூறப்படவில்லை என்று கொரொனா நிவாரண நிதி வழங்க மாநில அரசு மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம் ஆர் சி மற்றும் கே எஸ் போபண்ணா அமர்வு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பதிலளித்த மத்திய அரசு இறந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை மாநில பேரிடர் மேலாண்மைக்கு வழங்கலாம் என தெரிவித்து அந்த பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி இறந்தவரின் இறப்புச் சான்றிதழில் கொரொனா எனக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட இந்த நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனா இறப்பு சான்றிதழ் தொடர்பான குறைகளைக் களைய மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






