பள்ளிகள் திறந்த பிறகு புத்துணர்ச்சி வகுப்புகள்!
கோடை விடுமுறைக்கு பின்னர் விரைவில் பள்ளிகள் திறந்த 2 வாரங்களுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் சமூக விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை போதிக்கப்படவுள்ளன. அதே பாணியில் தமிழகத்திலும் பள்ளிகள் திறந்த ஓரிரு நாள்கள் புத்துணர்ச்சி வகுப்புகளை நடத்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





