--- --:--:-- --

அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில் மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

11

ம்மாபாளையம் நகராட்சி  நடுநிலைப்பள்ளி, கிரீன் சைக்கிள் சொல்யூஷன் சார்பில் மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1350 கிலோ பேப்பர்,பிளாஸ்டிக் சேகரிப்பு ..!

 

திருப்பூர்,திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி  நடுநிலைப்பள்ளி மற்றும்  கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனம் அவினாசி கிளை  சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் 2 ஆம் ஆண்டாக மறுசுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

 

கிரீன் சைக்கிள் சொல்யூஷன் அவிநாசி கிளை மேலாளர் ஜெபராஜ் மறுசுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் 5,6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் 256 மாணவ மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து 1350 கிலோ பேப்பர், நோட்டு, அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து இருந்தனர்.

 

இதில் 23 கிலோ பேப்பர் கொண்டு வந்து முதல் இடத்தை பிடித்த  7 வது வகுப்பு மாணவி ஃபஹீமா பர்வீனுக்கு கேடயம் மற்றும் மெடலும்,  22 கிலோ பேப்பர் கொண்டு வந்து 2 ஆம் இடம் பிடித்த 7 வது வகுப்பு மாணவர் ஹனீஷ்க்கு மெடல் வழங்கி கவுரவம் படுத்தப்பட்டனர். மேலும், இவர்களுக்கு சான்றிதழ், கொண்டு வந்த பொருட்களின் மதிப்பிற்கேற்ப அவர்கள் விரும்பிய மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

 

அதேபோல் பொருட்கள் கொண்டு வந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் ரூ 30 ஆயிரம் மதிப்பில் அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் எடைக்கு ஏற்ப மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களான  பென்சில், நோட்டு, விதை பேனா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.
படம் : மறுசுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிக எடையில்  பேப்பர்களை கொண்டு வந்த முதல் 2 இடம் மற்றும்  10 கிலோ எடைக்கு மேல் கொண்டு வந்தவர்களை படத்தில் காணலாம்.

Right Menu Icon