மாநிலங்களுக்கு நேரடியாக ஸ்புட்னிக் தடுப்பூசி விநியோகிக்கப்படும்..!
தடுப்பூசியை இந்தியாவின் மாநில அரசுகளுக்கு விநியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணை தூதர் ரோமன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் ஸ்புட்னிக் நோய் தடுப்புசி கோரியுள்ளதாக தெரிவித்தார். இந்த விண்ணப்பங்களை கவனமாகப் பரிசீலித்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என துணை தூதர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




