--- --:--:-- --

கர்ப்பிணிக்கு உதவிய ராபிடோ கார் ஓட்டுநர்..!

3

த்திரபிரதேசத்தில் தனது காரில் பயணித்த கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவிய ராபிடோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குரு கிராம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி செயலி மூலம் கார் ஒன்றில் பயணித்த பொழுது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக துரிதமாக செயல்பட்ட கார் ஓட்டுநர் விகாஸ் அந்த பெண்ணுக்கு தனது காரிலேயே பிரசவம் பார்த்ததோடு தாய் மற்றும் சேயை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

 

கர்ப்பிணிக்கு இக்கட்டான சூழலில் உதவிய கார் ஓட்டுனர் செயலியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் கார் ஓட்டுநர் விகாசை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Right Menu Icon