--- --:--:-- --

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மருந்தகத்திற்கு “சீல் வைப்பு!!” ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் அதிரடி!!

34522b48-f096-4438-9470-9196ae51eac6

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன.

 

வணிக நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், மளிகை, பால், மருந்து பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இராமநாதபுரம் சாலை தெருவில் இயங்கி வரும் பாவா மெடிக்கல்ஸ் கடையில் சமூக இடைவெளியை (social d கடை பிடிக்காததால் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் நேரில் சென்று அந்த கடைக்கு சீல் வைத்தார்.

 

மாவட்ட ஆட்சியர் வீரராகவராவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுகள் ஒரு பக்கம் என்றால், மருந்துக் கடைக்கு சீல் வைத்ததை சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

 

சம்பந்தப்பட்ட மருந்துக் கடை நிர்வாகத்தினர் ஏதேனும் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அறிவுறுத்தி எச்சரித்திருக்கலாம். அல்லது வழக்குப் பதிவு கூட செய்திருக்கலாம். ஊரடங்கு உத்தரவால் தற்பொழுது மக்கள் மிகவும் அல்லோலப்பட்டு தங்களுடைய தேவைகளுக்கு மருந்து வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி கடைக்கு சீல் வைத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon