--- --:--:-- --

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு..!

4

ள்ளக்குறிச்சி சாராயம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷசாராயம் குறித்து உயிரிழந்த வழக்கு விசாரணையில் சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்தை சுட்டிக்காட்டி உள்ள அவர் விஷசாராய விற்பனையை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon