படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார் ரஜினி..!
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து ரஜினி ஓரிரு நாட்களில் சென்னை திரும்புகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வந்தனர். ரஜினிகாந்த் தனி விமானத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி ஹைதராபாத் சென்று தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்றார்.
சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.






