தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் (காலை 10 மணி வரை) அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.





