இந்திய எல்லை பகுதியில் வீர மரணம் அடைந்த வீரருக்கு ராகுல் காந்தி ஆறுதல்!
ராமநாதபுரம் மாவட்டம்| திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தை சேர்ந்த இராவ வீரர் ஹவில்தார் பழனியின் மனைவிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் கடிதம் ஒன்றை அனுட்டியுள்ளார். இ
ந்த கடிதத்தை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் பழனியின் மனைவியிடம் வழங்கினார். பழனியின் துயர மரணத்தால் நான் மிகுந்த வேதனையடைகிறேன் என்றும் இன்று, முழு தேசமும் அவரது தியாகத்திற்காக தலைவணங்குகிறது.

அவரது தேசபக்தியையும் நாட்டிற்காக ஆற்றிய பணியினை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் அமைதியுடனும் சுதந்திரத்துடனும் வாழ முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அவர் தனது உயிரையே தேசத்திற்கு வழங்கி யுள்ளார்.
ஒரு தேசிய வீரரை இழந்ததற்கு நான் ஆழ்ந்த இரங்கள் தெரிவித்துக் கொள்வதாகவும், அவருடைய ஆத்மா சந்தியடைய வேண்டு கிறேன் என்று குறிப்பிட்டு அதில் கையெழுத்து செய்துள்ளார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பலரும் கலந்து கொண்டனர்.







