மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் ரகசிய கல்யாணம்.. மருத்துவரின் திருட்டுத் தொழில் அம்பலம்..!
நாகர்கோவில் அருகே மருத்துவர் எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு தற்பொழுது வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளதாக கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
ஆர்வநல்லூரை சேர்ந்த சுனிதா மேரி என்ற அந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வந்துள்ளார். அவரிடம் அறிமுகமான சக்தி என்ற நபர் தான் சேலத்தில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் என்று கூறியுள்ளார்.
இருவரும் சிறிது காலம் காதலித்த பின்னர் சுனிதாவை சேலத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். குடித்தனம் நடத்திய பொழுதுதான் சக்தி மருத்துவர் இல்லை ஆய்வக உதவியாளர் என சுனிதாவுக்கு தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் சுனிதா மேரியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு வேலை தேடி செல்வதாக கூறி சென்று சக்தி திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
அதைப்பற்றி விசாரித்த பொழுது தன்னை போலவே சக்தி பலரை ஏமாற்றி இருப்பது தெரிய வந்ததாக கூறும் சுனிதா மேரி கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.





