--- --:--:-- --

மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல் காந்தி..!

7

காராஷ்டிராவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கூறியுள்ளார். இன்று மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேச திட்டமிடப்பட்டிருந்த மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வரவிருந்தார்.

 

ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் பயணம் ரத்தானதால் அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி நான் உங்கள் அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

 

இந்த பயணத்தின் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய பின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன் என்றும் ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

 

மகாராஷ்டிரா விவசாயிகள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது எனக்கு தெரியும் என்றும் பாஜக அரசு விவசாயிகளுக்கு சரியான விலையை தரவில்லை எனவும் தெரிவித்தார்.

 

இந்தியா கூட்டணிக்கு வந்தவுடன் விவசாய பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தி வரும் 14 மற்றும் 16ஆம் தேதிகளில் மகாராஷ்டிராவில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

 

Right Menu Icon