பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் பணியிடை நீக்கம்..!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சக மருத்துவர்கள் இன்று ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துறை சேர்ந்த முருகேசன் என்பவர் மனைவி சிவரஞ்சனி பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு கடந்த 6-ம் தேதி சுகப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை அசைவின்றி இருந்துள்ளது.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சிவரஞ்சனி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையாக ஒரு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர் ரம்யாவை பணியிடை நீக்கம் செய்து சுகாதார பணி இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை கண்டித்து மயிலாடுதுறை மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு சிகிச்சையை மட்டும் இன்று மருத்துவர்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.





