--- --:--:-- --

குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

5

துரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. ஆனால், தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பேருந்து கதவில் ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

மேலும், வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் கசியவில்லை.

 

அதனால் தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்தில் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Right Menu Icon