ராஷ்மிகாவுக்கு அல்வா கொடுத்த புஷ்பா படக்குழு..!
பாகுபலியை போன்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த புஷ்பா படமும் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்போடு தான் முடிவடைந்தது. இந்த படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஷ்மிகா தற்பொழுது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
உச்ச நட்சத்திரங்கள் உடன் ஜோடி போட்ட ராஷ்மிகா தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதால் அந்த படத்தில் ராஷ்மிகா தான் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஹிந்தி நடிகை ஒருவரை படக்குழு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் ராஷ்மிகா கொலை செய்யப்படுவது போன்று காட்சியை வைத்து விட்டு அதன் பிறகு ஹிந்தி நடிகையுடன் அல்லு அர்ஜுன் டூயட் பாடுவது போல் திரைக்கதை மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.






