--- --:--:-- --

2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு ..!

9

மிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா கடல் அரபிக் கடலில் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon