சட்டவிரோதமாக பைக் ரேசில் ஈடுபட்ட புள்ளிங்கோ…
சென்னை எலியட்ஸ் கடற்கரை சாலையில் கடந்த வாரம் பைக் ரேசில் ஈடுபட்ட 16 பேரை பிடித்து விசாரித்த போலீசார் அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் அயனாவரம், வியாசர்பாடி பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதி வேகமாக ஒலி எழுப்பியபடி சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களில் இருவர் கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்நிலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 16 பேரை வியாழக்கிழமை பிடித்து விசாரித்த சாஸ்திரிநகர் போலீசார் 7 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் வெள்ளிக்கிழமை காலையில் அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி இளைஞர்களை அனுப்பி வைத்தனர்.






