--- --:--:-- --

வேலையை விட சொல்லி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்…!

7

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். இட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வித்யா. இவரது முதல் கணவர் விபத்தில் உயிரிழந்தையடுத்து கணவரின் மத்திய அரசு வேலை வித்தியாவிற்கு கிடைத்தது.

 

இவர் நெல்லை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை செய்த நிலையில் முதலை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் சில மாதங்களாக ஆறுமுகநயினார் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

 

தமக்கு வேலை இல்லாத சூழலில் மனைவி பணிக்கு செல்வதை விரும்பாத ஆறுமுகநயினார் வித்யாவை வேலைக்கு அனுப்ப மறுத்ததால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரச்சனையில் தாயார் வீட்டில் இருந்த வித்தியாவை கழுத்தறுத்து கொலை செய்த ஆறுமுகநயினாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon