புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவன்..! ஆசிரியர் திட்டியதால் தற்கொலை..!
கும்பகோணம் அருகே அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த மாணவனை முடி திருத்தம் செய்யுமாறு ஆசிரியர்கள் கூறியதால் தன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என்று வீடியோ வெளியிட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஷால் என்ற மாணவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தான். புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்து வந்த விஷாலை முடி வெட்டி விட்டு வருமாறு ஆசிரியர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்பொழுது நன்றாக முடியை வெட்டாமல் மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
கடந்த 26ஆம் தேதி பள்ளிக்கு வந்த விஷாலை முடிதிருத்தம் செய்யாததால் பெற்றோர்களை அழைத்து வருமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை அந்த மாணவன் செய்யவில்லை. இதனால் மாணவனை வகுப்பறையின் வெளியே ஆசிரியர் நிற்க வைத்ததாக தெரிகிறது.
மதிய உணவு இடைவேளையின்போது எலி பேஸ்ட் வாங்கி சாப்பிட்டுவிட்டு சக மாணவர்களிடம் சாப்பிட்டுவிட்டதாக கூறியுள்ளார். மாணவர்கள் இது குறித்து வகுப்பாசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






