--- --:--:-- --

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறுமி உயிரிழப்பு..! மு.க ஸ்டாலின் கண்டனம்..!

9

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது போன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மீண்டும் ஒரு சிறுமி என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

 

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் குளம் ஒன்றில் கடந்தது என்ற செய்தி நெஞ்சை அதிர செய்வதாக கூறியுள்ளார்.

 

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒருவர் தான் இந்த பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அந்த சிறுமியை கொலை செய்ததாக தடயங்கள் கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த கிராம நீதிபதி தலைமையில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று காலையிலிருந்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த சிறுமியின் உறவினர்கள் ஒப்புதலோடு பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை அந்த பகுதி மக்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்பதை போலீசார் தெளிவுபடுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

அது மட்டுமின்றி சிறு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் இது குறித்து ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடைகளை அடைத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon