--- --:--:-- --

கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன்..!

8

தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற இங்கிலாந்து போதைப்பொருள் கடத்தல் மன்னனை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போதை பிரிவு கடத்தல் மன்னன் இலங்கைக்கு தப்புவது குறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து பிடித்துள்ளனர்.

 

க்யூ பிரிவு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கைதானவர் இங்கிலாந்து போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் இந்திய ரூபாய் மற்றும் இலங்கை கனடா நாட்டு பணம் மற்றும் இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து அடுத்த கட்ட விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon